Total Pageviews

Tuesday 28 November 2017

அறிவியல் தமிழ் மன்றத்தில் இணைய ஒரு ரூபாய் கேட்பதன் மர்மம் என்ன ?

வெள்ளை அறை மூலமாக
மாதாமாதம் சராசரியாக 15,000 ரூபாய் செலவு செய்யும் நிலையில்
தமிழ் நண்பர்களிடமிருந்து நாள் ஒன்றிற்கு 1 ரூபாய்
சந்தா கேட்பதன் நோக்கம் என்ன ?.
உளவியல் சார்ந்த விளக்கம் இது புரியும் மக்களுக்கு புரியும்.

ஒரு சமயத்தில்
தமிழக அரசு மருத்துவ மனைகளில்
வெளி நோயாளி கடவுச் சீட்டுகள் பற்றி
ஒரு IAS அதிகாரி கொடுத்த கருத்துதான் எனது திட்டத்தின் ஆணிவேர்.

மருத்துவர்கள் அவரிடம்.
சார்..ஒரு நோயாளி வந்தால்
அவருக்கு பற்பல சோதனைகளை செய்து
மருந்துகளை எழுதி
அவரது லேப் ரிசல்ட் உட்பட அனைத்தையும்
எழுதிக் கொடுத்து அனுப்பினால்
அடுத்த நாளே
கடவுச் சீட்டை "காணவில்லை" என்று கூறிக் கொண்டு வருகிறார்கள்.

மீண்டும் பல செயல்களைச் செய்து
அனுப்ப வேண்டிய நிலையில் நாங்கள் உள்ளோம்
கடவுச் சீட்டினை தொலைக்காமல் இருக்க
ஏதாவது செய்யுங்கள்"என்றனர்.

"நான் முதல்வரிடம் பேசி
இனிமேல் அரசு மருத்துவ மனைகளில் கடவுச் சீட்டு 1 ரூபாய் 
என்று நிர்ணயிக்க வற்புறுத்துவேன்
அதன் பின்னர் யாரும் எதையும் தொலைக்க மாட்டார்கள்
ஆனால் என்ன...
கொடி பிடித்து பேசும் எதிர் காட்சிகள்
அரசை குறை கூறுவார்கள்
இருந்தாலும் முயற்சி செய்வோம்" என்றார்.

இப்பொழுது புரிகிறதா. 1 ரூபாய் வந்த கதை?

No comments:

Post a Comment